கம்பராமாயணம் (ராமாவதாரம்)
கம்பராமாயணம் என்பது கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மூல இராமாயணத்தினை இயற்றியவர் வால்மீகி முனிவர் இவர் வடமொழியில் இராமாயணத்தினை இயற்றியிருந்தார்.
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை ஏற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் கம்பராயணம் என்று அழைக்கப்படுகிறது