Get it on Google Play
Download on the App Store

மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன்

 


32. மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன்

கண்ணன் ஆயர்பாடியில் செய்த திருவிளையாடல்களைப் பலரும் அறிவர். பல காவியங்களிலும் அவை இடம் பெற்றுள்ளன. 
காவியங்களில் இடம் பெறாமல், செவிவழிச் செய்தியாக ஒரு திருவிளையாடல் நெடுங்காலம் வழங்கி வந்துள்ளது. அதனை அகநானூறு என்ற சங்க நூல் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

 

“வடாது வண்புனல் தொழுநை வார்புனல் 
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் 
மரம்செல மிதித்த மால்” ⁠(அகம்:59)

 

என்பதே அகநானூறு கூறும் செய்தி
“ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக, அவர், இட்டு வைத்த துகில் எல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு கண்ணன் குருந்தமரத்து ஏறினாராக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் பலராமன் வந்தாராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைவதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதற்குள்ளே அடங்கி, (ஆய்ச்சியர்) மறைவாராக, அவர் போமளவும் தானையாக உடுக்கத் தாழ்த்தார்” 
என்பது இப்பகுதிக்கு உரிய புழைய உரை
கண்ணன் ஆய்ச்சியர் துகிலை எடுத்துக் குருந்தமரம் ஏறினான். அப்போது எதிர்பாராமல், பலராமர் அவ்வழியே வந்து விட்டார். அதனால் கண்ணன், தன் குறும்பு வெளிப்பட்டு விடக்கூடாதே என்று அஞ்சினான். துகிலை மீண்டும் தந்து அணிந்து கொள்ளச் செய்ய நேரம் இல்லை. ஆதலால் தான் ஏறிய குருந்த மரத்தை நீருடன் தாழும்படி காலால் மிதித்து வளைத்தான். மரக்கிளைகள் வளைத்து நீராடிய பெண்களை மறைத்துக் கொண்டது. பலராமன் சென்றபிறகு, மரக்கிளைகளை நிமிர்த்துத் துகிலைத் தந்தான். என்பது இங்குக் குறிக்கப்படும் வரலாறு.
இந்த வரலாறு சிந்தாமணி நாமகள் இலம்பகம் 209 ஆவது பாடலும் குறிப்பிடுகின்றது.
இது தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த செய்தி. 

 

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

புலவர் த. கோவேந்தன்
Chapters
பதிப்புரை ஐவரை மணந்தவள் ஐவரை மணந்தவள் கண்ணனின் மனத்தூய்மை கடமையா வாய்மையா பெருஞ்சோறு வீமன் எழுதிய சமையல் நூல் எச்சில் இலை எடுத்த இறைவன் கண்ணனும் குதிரையும் கண்ணன் உதவாதது ஏன்? தருமனின் ஆணவம் அர்ச்சுனன் அகந்தை எலும்பு சொன்ன இறைமந்திரம் துரோணரின் மகள் சகுனியின் சகோதரர்கள் பாஞ்சாலி ஏன் சிரித்தாள் கர்ணனின் இடக்கைத் தானம் காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன் உயர்ந்த வேள்வி துரோணரும் ஆடுகளும் சகாதேவனின் தருமநீதி கண்ணனின் உண்மை வடிவம் அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் மலை போல் குவிந்த மலர்கள் தந்தையின் தவம் பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன் கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை குடிசையை எரித்த நெருப்பைக் கும்பிட்டு நின்ற பக்தர் கணிகைப் பெண்ணின் பக்தி புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் கண்ணனைத் தாக்கிய அம்பு கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள் வித்தையால் அழிந்த சீமாலிகன் மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் கண்ணன் ஆடிய கூத்துகள் தமிழ்ப்பெண் நப்பின்னை தேவகியின் ஏக்கம் பாமாவின் பக்தி வீமனும் விரதமும்