ஆடவர்
←வாழ்க்கை
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஆடவர்
பெண்கள்→
439216குடும்பப் பழமொழிகள் — ஆடவர்தியாகி ப. ராமசாமி
ஆடவர்
மனிதன் ஆறு - பெண் ஏரி. - குர்திஸ்தானம்
பத்து நாள் பெண்ணாயிருப்பதைவிட ஒரு நாள் ஆணாயிருப்பது மேல். -( ,, )
ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல. -( ,, )
பெண் ஒரு கோட்டை -ஆண் அவள் கைதி. -( ,, )
ஆடவர் நெல், பெண்டிர் குத்திய அரிசி. -சயாம்
(நெல் தானாக முளைக்கும், அரிசி முளைக்காது.) மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
-ஜெர்மனி
தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை. -( ,, )
பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம். -போலந்து
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு. - இதாலி
பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன். -ரஷ்யா
தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது. -( ,, )
[ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.)
ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர். - ஸ்பெயின்
சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும். -ஸ்பெயின் பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண். - அமெரிக்கா
பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள். - துருக்கி
(பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.) ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை. சீனா
பெண் அடிமையாயிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா? -ஷெல்லி மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
- இங்கிலாந்து