Get it on Google Play
Download on the App Store

தாய் தந்தையர்

 

 

←குழந்தைகள்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிதாய் தந்தையர்

குலம்→

 

 

 

 

 


439228குடும்பப் பழமொழிகள் — தாய் தந்தையர்தியாகி ப. ராமசாமி

 

 


தாய் தந்தையர்

 அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.  -ஜெர்மனி  
கோழி மிதித்தால், குஞ்சுக்குச் சேதமில்லை.  - தமிழ்நாடு  
தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.  -( , , )  
பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும்.  -இந்தியா  
செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய்.  -( , , )  தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்?  - இந்தியா  
புத்திசாலியான மகன் தந்தைக்கு மகிழ்ச்சி யளிப்பான்.

 -ப. ஏற்பாடு  
தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை

அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான்.  -சீனா  
மகனைப் புகழும் தந்தை தன்னையே புகழ்ந்து கொள்கிறான்  -( , , ) 
ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம், பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது.  -( , , ) 
ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.

 - இங்கிலாந்து  
தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப்

போவான்.  -( , , ) 
குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன்.  -ஃபிரான்ஸ்  தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது.  -ரஷ்யா  
குதிரைகளும் மனிதர்களும் தாய்வழியைக் கொள்வார்கள்  - இந்தியா  
அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள்.  -( , , ) 
பசுவின் பின்னால் எப்பொழுதும் ஒரு கன்று இருந்து வரும் சில சமயங்களில் அது சொந்தக் கன்றா யிருக்கும் சில சமயங்களில் வேறு பசுவின் கன்றா யிருக்கும்.  -கீழை நாடுகள்  
தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம்.  -ஆப்பிரிகா  
குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின்

பெயர் தாய்.  - தாக்கரே  தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்.  - இங்கிலாந்து  
தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள்.  - ( , , )  தழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள்.  - ( , , )  
தாயில்லாத வீடு வீடாகுமா?  - ( , , )  நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும்.  - ஜெர்மனி  தாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.   -ஸ்பெயின்  
தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.

 - யூதர்  
உங்களுடைய தந்தையையும் தாயையும் கௌரவியுங்கள்.  -ப. ஏற்பாடு  
என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக்

கொள், உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம்.  - ( , , )  
எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை

விகாரமானவர்களாகக் கருதுவதில்லை.  -ஸ்பெயின்  
புத்திசாலியான மகனால் தந்தை மகிழ்ச்சியடைகிறான். ஆனால் மூட மகனால் தாயின் உள்ளம் வருந்துகின்றது.

 ப. ஏற்பாடு  
தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான்.  -சீனா  
தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான்.  - ( , , ) 
நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிறார்கள்.  -ஷேக்ஸ்பியர்  
ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான்.  -ஸ்பெயின்  கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான்.  -யூதர்  தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே.
 -எகிப்து  
தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும்.  -ஸ்காட்லந்து  
தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி.  -பல்கேரியா  
தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை.  -எஸ்டோனியா  தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல்லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும்.
 -ரஷ்யா  
குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும்.  -( , , )  கடவுள் உயரே யிருக்கிறார், பூமியில் தந்தை யிருக்கிறார்.  -( , , ) 
(ஒரு தந்தை ) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல்.  -( , , ) 
நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.  -யூதர்  [அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.] 
மூட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக் கிறது!  -ஆப்பிரிகா  
அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை.  -( , , ) 
அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.--அவள் ஈடற்றவள்.  -( , , ) 
குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது.  -அமெரிக்கா