Get it on Google Play
Download on the App Store

திருமணம்

 

 

←பெண் பார்த்தல்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிதிருமணம்

கணவன்→

 

 

 

 

 


439220குடும்பப் பழமொழிகள் — திருமணம்தியாகி ப. ராமசாமி

 

 


திருமணம்


ஒன்று இளமையிலேயே திருமணம் செய்து கொள் , அல்லது துறவியாகி விடு.  -பல்கேரியா  குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பன்.  - இந்தியா  
வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார்.

 - தமிழ்நாடு  
பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மணம் செய்கிறார்கள்; மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.  -சீனா  பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம், ஆனால் ஒரு கோவேறு கழுதை வாங்க ஐம்பது ரூபாய் வேண்டும்.  சீனா  விவாகமாகாத பெண்ணுக்கு ஒரு சிறகில் ஊனம்.
 - அரேபியா  
ஒருபெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக்டையையாவது மணநது கொள்ளல் நலம்.  -அரேபியா  
நிலம் வாங்குவதற்கு என்றால், வேகமாக ஓடு; விவாகம் செய்து கொள்வதற்கு என்றால், மெதுவாக நட  -யூதர்  
இளமையில் மணம் செய்து கொள், நீ இளமையாயிருக்கும் போதே பெரிய குழந்தைகளை அடைய முடியும்.  -குர்திஸ்தானம்  
உடனிருந்து உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமே

விவாகம் என்று நான் கருதுகிறேன்.  - ஃபிரான்ஸ்  
ஆகக் கழிவான செருப்புக்கும் ஜோடி சேர்ந்துவிடும். -( ,,)  
ஓநாயை அடக்கிவைக்க அதற்கு விவாகம் செய்து வை.

 - ஃபிரான்ஸ்  [முரடனாயுள்ள மைந்தன், மனைவி வந்தால், அடங்கி விடுவான்.) 
இளமைத் திருமணம் நீண்டகால அன்பு,  - ஜெர்மனி  
அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாயம், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான்.  -( ,,) 
ஓராண்டு இன்பம் வேண்டுவோர் திருமணம் செய்து கொள்வது நலம்; இரண்டாண்டுகள் இன்பம் வேண்டுமானால், திருமணம் செய்யவேண்டாம்.  -( ,,)  
திருமணம் என்பது காதல் நோய்க்கு வைத்தியசாலை .

 -( ,,)  
போருக்குப் போகும் போது ஒரு முறை தொழவும், கடலுக்குப் போகும் போது இருமுறை தொழவும், திருமணம் செய்யும் போது மும்முறை தொழவும்.  -( ,,)  ஒவ்வோர் ஆதாமுக்கும் ஓர் ஏவாள் இருப்பாள்.  - போலந்து  
ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவனுக்குப் பொழுது போவது தெரியாது.  -( ,,)  
மூன்று சகோதரர்களில் இருவர் மூளையுள்ளவர், ஒருவன் விவாகமானவன்.  -( ,,)  
ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனால் மணமில்லாதிருப்பது அதைவிட நல்லது.  -போலந்து  
திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள்.  -( ,,) 
பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள் , ஆடவன் பின்னால் அழுவான்.  -( ,,) 
கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான்.  -அயர்லந்து  (உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது) 
முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு.  -அயர்லந்து  
நீ உன் மனைவியை மணந்து கொள்ளும் போதே உன் குழந்தைகளையும் மணந்து கொண்டு விட்டாய்.  -( ,,) 
(விவாகமானால், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.) 

மனிதன் காதலிக்கும் பொழுது வசந்தம், கலியாண சமயத்தில் பனிக்காலம்.  -ஸ்காட்லந்து  பணத்திற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்;
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.  -( ,,) 
பானையாக உருண்டு சென்று மூடியை கண்டுபிடிக்கும்.

 -பல்கேரியா  (திருமணத்திற்கு ஜோடி சேரும்.) 
கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான், அதன் பலனோ நெடுநாள் இருக்கும்.  - ஸெக்  ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு; மும்முறை பைத்தியம்.  -ஹாலந்து  
நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு நாயகன்
கிடைப்பான்; ஆனால் ஒரு 'டன்' கோதுமை கொடுத்தால் தான் ஒரு பெண் கிடைப்பாள்.

 -எஸ்டோனியா  
சமையல் மோசமானால், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை.

மோசமானால், ஒரு வருட நஷ்டம்; விவாகம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஷ்டம்.  -எஸ்டோனியா  
அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை.  -( ,,) 
கணவன் தலை, மனைவி இதயம்- இப்படியுள்ள திருமணம். இன்பமானது.  -எஸ்டோனியா  மனிதர் தானாக வரவேற்றுக் கொள்ளும் தீமை திருமணம்.  - கிரீஸ்  
ஒவ்வொரு ஜாடிக்கும் ஒரு மூடி கிடைக்கும்.  - இதாலி 
(திருமணம்.) 
'அம்மா! விவாகம் என்பது என்ன?' ‘மாவரைத்தல், நூல் நூற்றல், குழந்தைகள் பெறுதல், அழுதல்.'

 -மான்டினீக்ரோ  
காதல் சிறகுகளைக் கொண்டு பறக்கும், திருமணம் இரண்டு கழிகளின் உதவியால் நடந்து வரும்.

 -ரஷ்யா  
கலியாணத்தால் குளிர்ந்து போகாத காதல் நெருப்பு இல்லை.  -( ,,) 
திருமணம் என்றுதான் உண்டு, ஆனால் ‘பிரிமணம்' என்று கிடையாது.  -( ,,) 
ஆண்டவனே, என்னை இரண்டாவது கலியாணத்திலிருந்தும், மூன்றுவிட்ட தாயாதிகளிடமிருந்தும் காப்பாயாக.  -( ,,) 
ஒரு சகோதரிக்குக் கலியாணமானால், அடுத்தவளுக்கும்

ஆகும். ஒரு தொட்டி விற்றால், அடுத்ததும் விலை பாகும்.  - செர்பியா  உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம்.  - ஸ்பெயின்  திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.  -( ,,) 
காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும்.  -( ,,) 
திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட.  -( ,,)  
திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது.  -( ,,)  
வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும்.  - சுவீடன்  
கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன்

இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள்.  -யூதர்  
உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள்.  -எகிப்து  
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார்.  - ஜெர்மனி  
முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்;
இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள்,

 -ஹங்கேரி  
ஓர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் -யஜமானி.  - கிரீஸ்  
நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.  -( ,,)  
சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம்.  -லத்தீன்  
திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான்,

 -டால்ஸ்டாய்  'என்ன’ இவ்வளவு ஆத்திரம்?' 
'நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!' 'என்ன, முகம் வெளுத்திருக்கிறது?' 

'நான் திருமணம் செய்து கொண்டு விட்டேன்!'  -ரஷ்யா