Get it on Google Play
Download on the App Store

முதுமை

 

 

←இளமை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிமுதுமை

உடற் குறைகள்→

 

 

 

 

 


439242குடும்பப் பழமொழிகள் — முதுமைதியாகி ப. ராமசாமி

 

 


முதுமை


வீடு 'போ, போ' என்கிறது. 'காடு வா, வா' என்கிறது.  - தமிழ்நாடு  
வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன்.  - இங்கிலாந்து  
வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.  -( , , ) 
ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர்.  -( , , )  
முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும்.  -( , , ) 
காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது.  -( , , )  
மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும்.  -( , , ) 
வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது.  -( , , )  
முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவராயிருக்க வேண்டும்.  -( , , ) 
முதுமையே ஒரு நோய்.  -( , , ) 
வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம்.  -( , , ) 
மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை.  -( , , )  
முதுமை உள்ளே வந்தால், புத்தி வெளியே போய்விடும்.

 -ஷேக்ஸ்பியர்  
ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான்.

 -அயர்லந்து  
வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று.  - டென்மார்க்  
இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை.  -ஃபிரான்ஸ்  பெண்டிர்க்கு நரகம் முதுமை. முதுமையால், முகத்தைக் காட்டிலும், மனத்திலே அதிகச் சுருக்கங்கள் விழும்.
 -மான்டெயின்  வயதானவர்களுக்குத் தூரத்துப் பார்வை அதிகம்.
 - ஜெர்மனி  
இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர்.

 -( , , )  
வயோதிகனைப் போல வாழ்வில் பற்றுடையவர் இல்லை.  - ஸாஃபாகிளிஸ்  
கிழவர்கள் இரண்டாவது முறையாகக் குழந்தைகள்.

 - கிரீஸ்  
புறாவின் இளமையினும் கழுகின் முதுமை மேலானது.  -( , , ) 
இளமை ரோஜா மாலை, முதுமை முள் மகுடம்.  -யூதர்  
இளமையில் தேவன், முதுமையில் சயித்தான்.  - எராஸ்மஸ்  
முதுமையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருத்தல் அரிது.  - ஸெனீகா  
கிழவனுக்குத் தண்ணீர் இறங்கவில்லையானால், சமாதியைத் தயாரிக்கலாம்.  -ஸ்பெயின்  குழவிப் பருவத்தில் அழுகை அதிகம், வயது காலத்தில் பேச்சு அதிகம்.  -இந்தியா  
வயதான பின்பு உன் குழந்தைகளுக்குப் பணிந்து நட.

 -ஜப்பான் 
யார் தலைமயிர்தான் நிறம் மாறாமலிருக்கும்?  -சீனா  
பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக்கொண்டே யிருக்கும்.  -( , , ) 
ஆகாத காலத்தில் கிழவர்களுக் கெல்லாம் பற்கள் விழாமலிருக்கும்.  -அரேபியா  
இளமையின் நினைவு வந்தால் நெட்டுயிர்ப்புத்தான்.  -( , , )  
கரடிக்கு வயதானால், அது குட்டிகளுக்கு விளையாட்டுக் கருவியாகும்.  -குர்திஸ்தானம்  
கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால், சயித்தானையே நீ பிடித்து விடலாம்.  -ஐ. நாடோடிகள்  
நாற்பது வயது - இளமையின் முதுமை; ஐம்பது வயது முதுமையின் இளமை.  -ஃபிரான்ஸ்  சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான்.  -போலந்து  
வயது முதிர்ந்தவரைப் பார்த்து, உடம்பு எப்படி?' என்று

கேட்க வேண்டாம், 'இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும்.  -( , , ) 
முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும்.

 -பல்கேரியா  
'மனிதன் இருமுறை குழந்தை.  -எஸ்டோனியா  
கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும்.  -( , , ) 
மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது.  -( , , )  தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி.  -எஸ்டோனியா  கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது.  -( , , ) 
கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான்.  -( , , ) 
வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான்.  - ஐஸ்லந்து  தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.
 -ரஷ்யா  
கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள்.  -செர்பியா  
வயதானவருக்கு அவர் கேட்கு முன்னால் கொடு.

 -ஆப்பிரிகா  
தாடியுள்ள வாய் பொய் சொல்லாது.  -( , , ) 
முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை.

 - கிரீஸ்