ஆரோக்கியம்
←உடற் குறைகள்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஆரோக்கியம்
நோய்→
439244குடும்பப் பழமொழிகள் — ஆரோக்கியம்தியாகி ப. ராமசாமி
ஆரோக்கியம்
நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.
-ஜப்பான்
ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.
- துருக்கி
முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.
- ஜெர்மனி
மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும். -( , , )
இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை. - இங்கிலாந்து
சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
-இதாலி
செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும். -( , ,)
உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான். - துருக்கி
ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது. -ஸ்பெயின் இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம். -லத்தீன்
நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும். - ஜெர்மனி
உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள். -( , ,)
ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு.
-ஃபின்லந்து
ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள். -ஃபின்லந்து உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள். - இங்கிலாந்து தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான். -( , ,)
நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம் -( , ,)
முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். -( , ,)
வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும். -( , ,)
நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும்
மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும். -( , ,)
மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட. -( , ,)
குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை. -( , ,)
ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம். -பேக்கன்