இளமை
←விருந்து
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஇளமை
முதுமை→
439241குடும்பப் பழமொழிகள் — இளமைதியாகி ப. ராமசாமி
இளமை
உலகம் இளையோருக்காக உள்ளது. -ஸ்லாவேகியா
அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.
- இங்கிலாந்து
கழுதையும் இளமையிலே அழகுதான். - இந்தியா
பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன்.
-ஜப்பான் இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான். - துருக்கிஸ்தானம் புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. - சீனா
இளங் கன்று பயமறியாது. - தமிழ் நாடு வாலிபம் என்பது பைத்தியம்.
-கீழ் நாடுகள்
கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.
-ஆப்கானிஸ்தானம்
இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்! -ஃபிரான்ஸ்
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள்.
-ஜெர்மனி
இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய்.
- இங்கிலாந்து
வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும். -அயர்லந்து
வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும். -( , , )
மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம். -லத்தீன்
இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு.
-சுவீடன்
இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர்
ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர்.
-( , , )
ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். - -ஃபிரான்ஸ்
வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல். -( , , )
மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம். -கதே வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்
அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன. -( , , )
தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள். -( , , )
வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை.
- அரிஸ்டாட்டல்
குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன. - இதாலி
வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன் காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள். -( , , )
பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி
இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். - இங்கிலாந்து
வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும். -( , , )
இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும்,
முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். -( , , )
இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது. -( , , )
வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும். -( , , )
வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம். -( , , )
வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். -( , , )