Get it on Google Play
Download on the App Store

வீடு

 

 

←கற்பு

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிவீடு

அண்டை வீட்டுக்காரர்→

 

 

 

 

 


439224குடும்பப் பழமொழிகள் — வீடுதியாகி ப. ராமசாமி

 

 


வீடு

 
ஒவ்வொரு வீடும் ஓர் உலகம்.  -ஸ்பெயின்  சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.
 - லிதுவேனியா  
நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை.  -( ,, )  
உயரே ஏறிப் பார் : எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன.  - இந்தியா  யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும்.  - தமிழ்நாடு  தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி
ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது.  -மலாய்  
ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான்.

 -( ,, )  
கட்டடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி.

 - இங்கிலாந்து  
வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள்

முளைத்திருப்பதாக எண்ணுவான்.  -எஸ்டோனியா  
வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு.  -( ,, )  
நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான்.  - நார்வே  
வீட்டுக்குக் கேடு வருவது பின்கதவினால்தான்.  -ரஷ்யா  
நம் வீடு இறைவனுடையது.  -செர்பியா  வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான்.
 -ஸ்பெயின்  
ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  -யூதர்  
ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும்.  - ஆப்பிரிகா  
வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின் மீது அமரக் கூடாது.  -( ,, ) 
தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களைப் பொருட்படுத்த மாட்டான்.  -( ,, ) 
பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும்.  - எகிப்து  
வீடு அன்பு நிறைந்த இடம்.  -ஆப்பிரிகா  பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம்.  -ஜெர்மனி  
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.  -( ,, )  ஒரே கழியைக் கொண்டு எப்படி வீடு கட்ட முடியும்?  -சீனா 
கட்டிய வீடு கிடைக்கும், ஆனால் மனைவியை நாம்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.  -இங்கிலாந்து  மனிதனுக்குத் தன் வீடுதான் மாளிகை.  -( ,, )  
முறையில்லாத வாடகைக்காரனைவிட, காலி வீடே

மேலானது.  -( ,, )  
சத்திரத்தின் பக்கத்திலும், முக்குமுனையிலும் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.  -( ,, ) 
வீட்டைப் பார்க்கிலும் கதவு பெரிதா யிருக்கக் கூடாது.  -( ,, ) 
வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம்.

 -( ,, )  
வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள்

தேவை; ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக் கொள்ளவும்.  -அரேபியா  
வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும்.  -ஆர்மீனியா  
[விளக்கு-வழி காண்பதற்காக; அனல்-குளிர் காய்வதற்காக.) 

வெறும் கையோடு வீடு திரும்பினால், உன்னை வீட்டுக்கு உடையவனாக. எண்ணிக் கொள்ள வேண்டாம்.  -பல்கேரியா  
[வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.] வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை.  -ஃபிரான்ஸ்  
இதயம் எங்கே தங்கியுள்ளதோ அதுவே வீடு.  - லத்தீன்  
என் வீட்டில் நானே அரசன்.  -ஸ்பெயின்  
தன் வீட்டில் அமைதி கிடைக்காதவன் பூலோக நரகில் இருக்கிறான்.  - துருக்கி