Get it on Google Play
Download on the App Store

பெண் பார்த்தல்

 

 

←காதல்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிபெண் பார்த்தல்

திருமணம்→

 

 

 

 

 


439219குடும்பப் பழமொழிகள் — பெண் பார்த்தல்தியாகி ப. ராமசாமி

 

 


பெண் பார்த்தல்


தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு.  - தமிழ்நாடு  
வலுவில் வந்தவள் கிழவி.  -( ,, ) 
கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.  - துருக்கி  மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும்.  -ஆர்மீனியா  
அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை.  -பர்மா  
ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும்.  -சயாம்  
காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம்.  - போலந்து  கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான்.  - இங்கிலாந்து  
பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும்.  -ஸெக்  செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு.
 - எஸ்டோனியா  
மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே.  -( ,, )  
ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது.  - ஃபின்லந்து  ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு.  -( ,, ) 
எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்ணையே மணந்துகொள்.  - கிரீஸ்  குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும்.  -லத்தீன்  
முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக்கொள்ளலாம்.  - நார்வே  மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும்.  -ரஷ்யா  
உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே.  -( ,, ) 
உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.

 - ஸ்பெயின்  
பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு.  -ஆப்பிரிகா  
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது.  -( ,, ) 
அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன்.  -( ,, ) 
திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள்.  -( ,, )  
பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.  - எஸ்டோனியா