அண்டை வீட்டுக்காரர்
←வீடு
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஅண்டை வீட்டுக்காரர்
இல்வாழ்க்கை→
439225குடும்பப் பழமொழிகள் — அண்டை வீட்டுக்காரர்தியாகி ப. ராமசாமி
அண்டை வீட்டுக்காரர்
அண்டை வீட்டுக்காரரை நேசி, ஆனால் குறுக்குச் சுவரை இடித்து விடாதே. -இந்தியா
உன் தலைக்குச் சேராத தொப்பியை அடுத்த வீட்டுக்காரர் தலையில் கட்டாதே. -( ,, ) அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம். -( ,, )
அம்மா சொல்வது போல் உண்மை இராது, அயலார் சொல்வதே உண்மை. -( ,, )
பக்கத்து வீட்டுக்காரன் உன் பந்துவைவிட நெருங்கினவன். -அல்பேனியா துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும்
பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன். - இங்கிலாந்து
உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவனா யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும். -ஸெக்
அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது. - டென்மார்க்
மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள்.
-( ,, )
நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள்.
- கிரீஸ்
நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகு தூரத்தில் புகழப்படுவதைவிட மேலாகும். - நார்வே அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும்,
அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு. -ரஷ்யா
மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது. -( ,, ) அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம். - ஜெர்மனி பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி. - இங்கிலாந்து
நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது. -( ,, )